ஜனாதிபதியின் முடிவுக்கு சவாலாக ஹிஸ்புல்லாஹ் களத்தில் : ஹர்த்தாலுக்கும் அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | மட்டக்களப்பு) – கொரோனா தடுப்பு முகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை பாவிப்பது தொடர்பில் அதன் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஆளுநர் எம்.எல்.எம் ஹிஸ்புல்லாஹ் இனால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு பிரதேசங்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் கிசு கிசுக்கப்படுகின்றது.

அதன்படி, குறித்த பிரதேசத்தில் ஹர்த்தால் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பஸ் போக்குவரத்தில் இருந்து விலகி இருக்கவும் கோரியே குறித்த துண்டுப்பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மேலும், இது தொடர்பில் காத்தான்குடி நகர சபையும் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.