(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனங்கள் சக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளதாக ஒரு சில பிரபல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி குறித்த விடுமுறை இன்றிலிருந்து அமுலில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இலங்கையர் ஒருவரான சுற்றுலாத் துறையைச் சேர்ந்த ஒரு ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உலகளாவிய ரீதியில் 4,284 பேர் உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.