இலங்கையில் மேலும் ஒருவர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 11 ஆவது நபர் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் ஜெர்மனிக்கு சென்று வந்தவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த நபர் தற்பொழுது ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.