கொரோனா வைரஸ்; மண்ணை தூவிய நால்வர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் சோதனைக்கு செல்லாமல் விமான நிலைய அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி வீடுகளுக்கு சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய நால்வரே இவ்வாறு இரத்தினபுரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவ்வாறு விமான நிலையத்தில் இருந்து சோதனைக்கு செல்லாமல் திருட்டுத்தனமாக வீடுகளுக்கு சென்ற 300 பேரை தேடி பொலிஸார் வலை வீசியுள்ளனர்.