(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சொந்தமான ஹோட்டலை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகின் தலைசிறந்த வீரரான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதனால் அவர் சொந்த ஊரான மடேய்ராவில் ரொனால்டோ தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு லிஸ்பனில் நட்சத்திர ஓட்டல் உள்ளன. இந்த ஹோட்டலை ரொனால்டோ கொரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனையாக மாற்றிவிட்டார் என்ற செய்தி வெளியானது.
இதை ஹோட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது.
ஓட்டல் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் ஒட்டலை மருத்துவமனையாக மாற்றவில்லை. இனிமேலும் ஓட்டலாகத்தான் இருக்கும். என்று தெரிவித்துள்ளார்.