பொதுத் தேர்தலில் ஞானசார தேரர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் களமிறங்கவுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குருணாகலை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். அங்குதான் ஞானசார தேரரும் களமிறங்குகிறார்.

இவர், பொதுத்தேர்தலில் ‘அபே ஜன பல பக்சய’ வின் (எமது மக்கள் சக்தி கட்சி) சார்பில் கொடி சின்னத்தின்கீழ்  போட்டியிடவுள்ளார்.