இந்தியா சென்ற யாத்திரர்களை இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியா சென்றுள்ள இலங்கை யாத்திரர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர இன்று(18) பிற்பகல் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று புது டில்லி செல்லவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மதவழிபாட்டிற்காக சென்றுள்ள சுமார் 900 பேரை விசேட விமானம் ஒன்றின் மூலம் அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.கே.பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.