ISIS இற்கு ஆட்சேர்த்த 18 வயது ஸ்பெயின் யுவதி (Including Images)

சிரியாவின் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு வுக்கு ஆட்சேர்த்த குற்றச்சாட்டில் ஸ்பெயினில் கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர் வீதியில் முகத்தை மறைக்கும் பர்தாவுடன் கையில் விலங்கிட்டு பரபரப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ஸ்பெயினின் தீவிரவாத தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 18 வயது யுவதி அதிக சன நெரிசல் கொண்ட வெலன்சியஸ் நகர வீதியிலேயே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அப்போது அவரது உடைமைகள் அடங்கிய பொருட்களும் ஆயுதம் ஏந்திய பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த யுவதி இணையத்தளத்தை பயன்படுத்தி ஐ.எஸ். குழுவுக்கு ஆட்சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர் சிரியாவுக்கு பயணிப்பதற்கான கடைசி ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக மேலும் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்த யுவதி மொரோக்கோ நாட்டவர் என்றும் கடந்த நான்கு ஆண்டுகளாக ஸ்பெயினில் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸாரினது தகவல்கள் குறிப்பிடுகின்றது.

ஸ்பெயினின் 100க்கும் அதிகமானவர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் ஜிஹாதிகளுடன் இணைந்திருப்பதாகவும் சிலர் ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த நாடு திரும்பி இருப்பதாகவும் ஸ்பெயின் நிர்வாகம் மேலும் குறிப்பிடுகிறது.

ISIS-girl-1 ISIS-girl-2 ISIS-girl-3

(riz)