அரசாங்க தரப்பு தகவல்களின்படி எஞ்சியுள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் சத்திய பிரமாண நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.
தேசிய அரசாங்கத்துக்காக நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட 48 அமைச்சரவை அமைச்சர்களில் 43 பேர் ஏற்கனவே சத்தியபிரமாணம் செய்துள்ளனர்.
இந்தநிலையில் 5 அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நால்வரும் அடங்கவுள்ளனர்.
இது தொடர்பான நிகழ்வு இன்று ஏற்பாடு செய்திருந்த போதும் பின்னர் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் 27 ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களும் 26 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களும் சத்தியபிரமாணம் செய்துக்கொள்வார்கள்.
(riz)