இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஜேரோம் ஜெயரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.
இத்தோல்வியைத் தொடர்ந்து இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அத்தப்பத்து திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் அந்த அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஜேரோம் ஜெயரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுடன் விளையாட இருப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(riz)