கொரோனாவால் பலியான 3 ஆவது நபரின் இறுதி சடங்கு நிறைவு

கொரோனாவால் பலியான 3 ஆவது நபரின் இறுதி சடங்கு நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்த 3ஆவது நபரின் சடலம் இன்று (02) பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

நேற்றையதினம் (01) மரணித்த மருதானையைச் சேர்ந்த 73 வயதான குறித்த நபரின் சடலம், முல்லேரியாவிலுள்ள பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது தகனம் செய்வது தொடர்பான சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய, உடல் சீலிடப்பட்டு, மூடப்பட்ட நிலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.