பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கருணாசேன ஹெட்டியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கும் வைபவத்தில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபயகோன் இந்த நியமனக் கடிதத்தை கருணாசேன ஹெட்டியாரச்சிக்கு வழங்கிவைத்தார்.
கருணாசேன ஹெட்டியாரச்சி நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் வைபவத்தில் பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக மற்றும் அமைச்சரவை செயலாளர் சுமித் அபேசிங்க ஆகியோர் பங்குபற்றினர்.