கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 335 ஆக உயர்வு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

——————————————————– [UPDATE]

மேலும் நால்வர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 105 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.