மேலும் இருவர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 109 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 414 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.