கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – நாட்டில் மேலும் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 440 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 118 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.