எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இனவாதம் பேசுவதில்லை என கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிகளை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
இதன் போது மல்வத்து பீடாதிபதி, சம்பந்தன் இனவாத கருத்துக்களை வெளியிடுவதில்லை என கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் சம்பந்தனின் பேச்சில் இனவாத கருத்துக்கள் வெளிப்பட்டன. எனினும் தற்போது அவ்வாறான ஓர் நிலைமை இல்லை என்றே தெரிகின்றது.
வடக்கிலும் தெற்கிலும் கிராம மக்களிடையே இனவாதம் கிடையாது. அரசியல்வாதிகளே இனவாதத்தை தூண்டுகின்றனர்.
தங்களது தேவைக்காக அவ்வாறு செய்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(riz)