(ஃபாஸ்ட் நியூஸ் |கொழும்பு ) – குணசிங்கபுர இலிருந்து தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவர் இன்று(01) மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை வான்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்ஹ உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 14, 18 ஆகிய தினங்களில் இவர்கள் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் சென்றவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவர்களது உடல்கள் முல்லியாவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனைக்கு இரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருந்த இருவரில் ஒருவர் 80 வயதினை தாண்டியவர் என்றும் தேசிய அடையாள அட்டைகள் அவர்களிடம் இல்லை என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.