தனக்கு அளிக்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி மூலம் தான் அவமரியாதை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பாலித ரங்கே பண்டார தனது மனக்குமுறலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தனக்கு கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்காமையானது தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமானம் அன்றி, வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், அவமானமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி தொடர்பான ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பாலித ரங்கே பண்டாரவை வரவேற்கும் வகையில் ஆனமடுவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாலித ரங்கே பண்டாரவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்த போதிலும், தேசிய அரசாங்கத்தில் அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.
பாலித ரங்கே பண்டாரவுக்கு இம்முறை ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர் இது தொடர்பிலான தனது அதிருப்தியை ஆனமடுவயில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் வெளியிட்டுள்ளார்.
(riz)