(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 288 பேர் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக இன்று(14) நாட்டை வந்தடைந்தனர்.
யூ எல் -102 என்ற விமானம் இன்று மதியம் 12.25 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதில் 288 இலங்கையர்கள் மற்றும் 16 ஜப்பானியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.,
குறித்த 16 ஜப்பானியர்களும் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நரீட்டா விமான நிலையம் நோக்கி பயணிக்கவுள்ளனர்
இதையடுத்து விமானத்தில் வருகை தந்த இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.