இந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 101,139 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,630 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 131 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 39174 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35058 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1249 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.