ஐ.நா பொதுச் சபையின் 70ம் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70ம் அமர்வுகள் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அமர்வுகளில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று(14) அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி எதிர்வரும் 23ம் திகதி அமெரிக்கா நோக்கிப் பயணமாகவுள்ளார்.

இன்னும், எதிர்வரும் 30ம் திகதி அமெரிக்க நேரம் காலை 9.45 அளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் போது பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் அவர் சந்திப்புக்களை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்று வந்தமை பல்வேறு தரப்பினராலும் விமர்சனம் செய்யப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பணத்தைக் கொண்டு பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் இவ்வாறு அமெரிக்கா விஜயம் செய்வதாக ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

(riz)