முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு எதிராக 600 மில்லியன் ரூபா முறைகேடு வழக்குத்தாக்கல்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு எதிராக 600 மில்லியன் ரூபா முறைகேடு வழக்குத்தாக்கல்

முறையற்ற வகையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் பணத்தை பயன்படுத்தியமைக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதியின் செத் யலாளர் லலிவீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த பணத்தை இருவரும் பௌத்த அடியார்களின் வழிபாடுகளுக்காக செலவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்த இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 18ஆம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரொஜினி வீரரட்ன தீர்மானித்துள்ளார்.

இந்த வழக்கில் தேர்தல்கள் ஆணையாளர் உட்பட்ட 21 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் இந்த தொகை பணம் தப்ரோபென் இலங்கை வங்கி கிளையில் உள்ள ஜனாதிபதி செயலாளரின் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

(riz)