ஆசியாவில் மனிதன் பிறப்பதால் ஐரோப்பாவிற்கு பிரசவ வேதனையாம்
“ஆசியாவில் மனிதன் பிறப்பதால்
ஐரோப்பாவிற்கு பிரசவ வேதனையாம்.. அது தான்
மனிதன் வேண்டாம் என்கின்றது…. ”
உலகில் மனிதனில்லை, மனிதனைக் காணவில்லை..
மனிதன் வேண்டும்…
ஆச்சரியமளிக்கிறதே!! என்ன கேட்கிறாய்…
ஏன்!! நான் மனிதன் கேட்கிறேன்… இந்த உலகில் மனிதர்கள் இல்லை .
மனிதன் வேண்டும்.
இல்லையில்லை நான் ஒரு மனிதனை தேடுகின்றேன்…!!!
7௦௦ கோடி மனிதர்கள் இருக்க… இன்னும் மனிதன் கேட்கிறாய்
இனப் பெருக்கம் நவீன உலகின் முதற்தரப் பிரச்சினையாம்!
நீ என்ன!! இன்னும் எதற்கு மனிதன்?
மனிதப் பெருக்கத்தை கட்டுப்படுத்த உலகமே துடிக்கிறபோது நீ எதற்கு மனிதன் கேட்கிறாய்?
சீனாவில் மட்டும் 2௦12ல் 25 கோடி கருக்கலைப்பு, இலங்கையில் 250 000.
இவை உலகுக்கு மனிதன் போதும் என்று தானே சொல்கிறது
எதற்கு மனிதன் கேட்கிறாய்?
உலகில் அனாதைகள் 153 மில்லியன்கள்
அகதிகள் 400 மில்லியன்கள், மன நோயாளர்கள் 7௦௦ மில்லியன்கள்
இவை போதாதா? இந்த நிலை இன்னும் வேண்டாம்….
மனிதன் வேண்டாம்… மனிதன் வேண்டாம்….
உலகுக்கு… மனிதன் வேண்டாம்.. என்று உலகமே சொல்லும் போது
நீ மட்டும் எதற்கு மனிதன் கேட்கிறாய்??
இலங்கையில் வடக்கில் மட்டும் 9௦௦௦௦ விதவைகள்…. எதற்கு…?
எதற்கு! எதற்கு இன்னும் மனிதர்கள்?
விதவைகளாகவா? அனாதைகளாகவா ??…… அங்கவீனர்களாகவா? அனாதரவானவர்களாகவா?
எண்ணிக்கை இன்னும் பெருகிடுமே!!!!!!
உலகத்தில் வறுமையில் பல நூறு கோடிப் பேர்
நாள் தோறும் பசி பட்டினியால் இறப்போர் 25 ௦௦௦
உலகில் 2௦௦ கோடி மக்கள் அருந்துவது ஆரோக்கியமற்ற அசுத்த நீர்…
பொருப்பதில்லை எனக்கு…! மனிதன் இன்னும் அவதிப்படவா மனிதன் கேட்கிறாய்???
மனிதன் உலகில் மிருகமாகிவிட்டான்…..
இல்லை… இல்லை.. மிருகத்தைவிட மோசமாகிவிட்டான்…..
மிருகங்கள் கூட ஆச்சரியப்படுகின்றன மனிதனை பார்த்து, அவ்வளவு கெட்டுவிட்டான்
மனிதன்…
இன்னும் எதற்கு மனிதன்?
மனிதனுக்குத்தானே பல ஆயிரம் நோய்கள்….
மட்டுமல்ல… ஆகா.. மனிதனே நோய்களை உற்பத்தி செய்து வியாபாரம் செய்யும் அறிவியல் யுகம் இது!
மனிதனால் தானே யுத்தங்கள்… மனிதனால் தானே அழிவுகள்… மனிதனால் தானே எல்லாம்…
மிருகங்கள் தற்கொலை செய்வதுண்டா??
மனிதன் தற்கொலை செய்யவென்று பிரபல இடங்கள் வைத்திருக்கிறான்…
விரக்தியால் மட்டுமல்ல.. மன உளைச்சல் மட்டுமல்ல.. வறுமை மட்டுமல்ல..
நாகரீக உலகில் “சுய விருப்ப தற்கொலை” யும் உண்டு…
ஆங்கிலத்தில் “Assistant Suicide” என்பார்கள்
உலகில் வருடாந்தம் ஒரு மில்லியன் தற்கொலைகள்,
இலங்கையில் ஆயிரம் முகநூல் தற்கொலைகள்,
காதலன் பார்த்திருக்க Skype Vedio தற்கொலைகள்…
நாகரீக அமெரிக்காவில் மட்டும் 1 இலட்சத்து 3௦ ஆயிரம் வருடாந்த தற்கொலைகள் ….
தொழில்நுட்ப ஜப்பான் தற்கொலைக்கு முதலிடம்….
இந்த மனிதன்! இன்னும் உலகிற்கு வேண்டுமா???
ஏன் மனிதன் கேட்கிறாய்??
எதற்கு மனிதன் கேட்கிறாய்??
மனிதனுக்கே மனிதனை வெறுத்துவிட்டது….
அதுதான் மனிதன் செல்லப்பிராணியாய் கொஞ்சி விளையாட வீட்டில் மிருகம் வளர்க்கிறான்
மனிதன் மனிதனை விட மிருகத்தை நேசிக்க ஆரம்பித்துவிட்டான்
சரணாலயம் இருக்கிறது….
மிருகத்தை பாதுகாக்க மனிதன் அத்துமீற முடியா பாதுகாப்பு வலயம் அது…..
மிருகங்கள் சுகமாய் வாழ்வதற்கு என்றே தனியான காடுகள்….
மனிதன் அவற்றை பாதுகாக்கின்றன…
ஆனால்….. மனிதன் எந்த நாட்டில் சுகமாய்,பாதுகாப்பாய்,நிம்மதியாய்,அமைதியாய்… வாழ்கிறான்???
மனிதன் வாழும் எந்த பூமியில் அமைதி இருக்கிறது…??
கொலை, மனிதனின் வறுமானமுள்ள நவீன வியாபாரம்
மனிதனை மனிதன் கொல்வது இன்று சர்வதேஷ வியாபாரமாக மாறிவிட்டது…
உயிர் நண்பன் உயிர் எடுக்கும் காலம் இது….
உறவுகள் சேர்ந்து கூட்டுக் கொலை செய்யும் காலம்…
பிள்ளையை கொன்று விட்டு தானும் சாகும் அதிசய காலம் இது…
வேடிக்கை உலகம் இது.. சீ… அவமான உலகம் இது……
இதோ….
மனிதனை கொல்வதை கேட்காத நம் நாட்டு மனிதனுக்கு மாடுகள் மீது அக்கறை வந்திருக்கிறது….
ஏனப்பா!! எதற்கு நீ மாத்திரம் மனிதன் கேட்கிறாய்..???
மனிதன் தானே பிரச்சினைக்குறியவன்….. மனிதன் கேட்கிறாய்.. எனக்குப் புரியவே இல்லை
மனிதனுக்கு எதிரி மனிதன் தான்… மனிதனுக்கு முதல் எதிரி மனிதன் தான்….
இவ்வளவு மனிதன் செய்கின்ற போது ஏன் மனிதன் கேட்கிறாய்????
மனிதன் வேண்டாம்….
மனிதன் போதும் என்று மேற்குலகம் சொல்கிறது……
மனிதப் பெருக்கத்தை கட்டுப்படுத்த உலகமே சர்வதேசக் கோஷம் போடுகிறது….
மனிதன் போதும் என்றே உலகம் சொல்கிறது…
சீனாவில் ஒன்றுக்கு மேல் பெற்றெடுத்தால் அபராதம்
இந்தியாவில் இனப்பெருக்கக் கட்டுப்பாடு…..
பொருளாதார நெருக்கடி, உலகில் உணவுப் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை ….
என்று சொல்லி “புது மனிதன்” உலகுக்கு வேண்டாம் என்று புது உலகம் சொல்கிறது…..
நில்லுங்கள் ஆனால்…….!!!!!!
மனிதன் வேண்டாம் என்று சொல்லும் மேற்கு தன் நாட்டில் அதிகம் குழந்தை பெறுவோருக்கு சன்மானம் கொடுக்கிறதே!!!!!
ஒன்றுக்கு மேல் பெறுவதை அவமானமாகக் கருதும் அவர்கள் பெற்றெடுப்பதற்காய் பரிசு கொடுக்கிறதே…. அது என்ன??!!
புரிவதில்லையா??? புரியாத புதிர் ஒன்றுமில்லை அது…
அது புரிய வேண்டிய மேற்கத்திய ஜனநாயகம்
ஆசியாவில் மனிதன் வேண்டாமாம்… ஐரோப்பாவில் மனிதன் வேண்டுமாம்….. அதுதான்….
ஆசியாவில் மனிதன் பிறப்பதால்
ஐரோப்பாவிற்கு பிரசவ வேதனையாம்.. அது தான்
மனிதன் வேண்டாம் என்கின்றது….
யானை பிள்ளை பெற்றெடுக்க ஏன் குரங்கு முக்க வேண்டும்……???
புரியவில்லையா??? அதுதான் மேற்கு விதித்த மனித உரிமை……
இந்த உலகத்தில் சட்டத்தினால் கிடைப்பதை அனுபவிப்பதை விட சட்டமின்றி சட்டவிரோதமாக அனுபவிப்பதை விரும்புபவர்கள் அதிகரித்து வருகிறார்கள்…
தந்தைக்கு மகள் விளங்குவதில்லை… மகளுக்கு தந்தை விளங்குவதில்லை… காமக் கலாசாரம் கண்ணியமாய் உறவையும் கசக்கிவிட்டது…..
2௦௦9ம் ஆண்டின் தகவலின்படி நம் நாட்டில் தந்தைக்கும் மகளுக்கும் பிறந்த குழந்தைகள் 5௦க்கும் மேல்…..
இந்த நாட்டில் கேட்கின்ற சில செய்திகளை எப்படி நம்புவது என்று தெரியவில்லை…. புரிவதுமில்லை….
7௦ வயதையும் தாண்டி கிழவிகளை கற்பழிக்கும் குபேரர்கள் இருக்கிறார்கள் …
உறவுகளையே கற்பழிக்கும் காட்டுமிராண்டிகள் இருக்கிறார்கள்..
மேற்கின் சட்டம்… அது மனித உரிமைச் சட்டமாம்….
ஆனால்….
விருப்பத்துடன் இருவரும் இணங்கினால் குற்றமில்லையாம்.. விருப்பமின்றி மனைவியை நெருங்கினாலும் குற்றமாம்………
இது மேற்கத்திய அறிவியல் சட்டமாம்…
வாழ்பவர்களை விட இந்த உலகில் நடிப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள்…
உடலைக் காட்டி வியாபாரம் செய்யும் பெண்கள் தான் சிறந்தவர்கள்….
ஆபாசத்தை சொல்லி கவிபாடுபவர்கள் தான் உயர்ந்தவர்கள்….
ஆபாசமும், விரசமும் இன்றைய மனிதனுக்கு நாளாந்த குடியாகிவிட்டது…
இந்த மனிதர்கள் இருந்து உலகுக்கு என்னதான் பயன்…????
போயும் போய் நீ இன்னும் மனிதனை கேட்கிறாய்……??
நான் மனிதனைக் கேட்கவில்லை மனிதன் கொண்ட மகான்கள் உலகுக்கு வேண்டும் என்றேன்….
புலித்தோல் போர்த்திய பூனையாக இருக்கும் மனிதன் வேண்டாம்….
சகோதரத்துவத்தை தம் சகாக்களோடு மட்டும் வைத்துக்கொள்ள மனிதன் வேண்டும்…
இறுதியாக……
அவர்களை இதன் பின் காண்பது அரிது ஆனால் உருவாக்கலாம் எனற நம்பிக்கை எனக்குண்டு…….