மக்கா அனர்த்தம் : பேஸ்புக் பதிவில் சந்தோஷத்தை வௌியிட்டவர் கைது

மக்­காவில் ஏற்­பட்ட அனர்த்தில் நூற்­றுக்கும் மேற்­பட்ட ஹஜ் பய­ணிகள் உயி­ரி­ழந்த நிலையில், அதற்கு மகிழ்ச்சி தெரி­விக்கும் வகையில், பேஸ்­புக்கில் கருத்து பதிவு செய்த ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மதுரை அரு­கே­யுள்ள திரு­மங்­க­லத்தை சேர்ந்­தவர் வேல்­மு­ருகன் என்­கின்ற தமி­ழக பார­திய ஜனதா கட்சி நிர்­வா­கியே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ­ரது பேஸ்புக் பதிவில், மக்­காவில் அண்­மையில் நடந்த விபத்தில் முஸ்­லிம்கள் நூற்­றுக்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­ததை வர­வேற்று மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக கருத்து பதிவு செய்­தி­ருந்தார்.

இதை ராம­நா­த­புரம் மாவட்­டத்­தி­லுள்ள சில முஸ்லிம் பேஸ்புக் பய­னா­ளிகள் பார்த்து, அந்த தக­வலை, திரு­மங்­க­லத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு தெரி­வித்­துள்­ளனர்.

திரு­மங்­க­லத்தை சேர்ந்த அஜ்மிர் அலி என்­பவர், பேஸ்புக் பதிவு குறித்து பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். குறித்த முறைப்­பாட்டின் பேரில் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­பொ­லிஸார், வேல்­மு­ரு­கனை கைது செய்து, அவ­ருக்­கெ­தி­ராக வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளனர்.

விசா­ர­ணை­யின்­போது வேல்­மு­ருகன் தகவல் தொழில்­நுட்ப பாடத்தில் இள­நிலை பட்டம் பயின்­றவர் என்­பதும், திரு­மங்­க­லத்தில் கணினி நிலையம் நடத்­தி­வ­ரு­பவர் என்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது. சர்ச்­சைக்­கு­றிய அந்த பேஸ்புக் கருத்து அவ­ரது பக்­கத்தில் இருந்து நீக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி, தமிழக பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயற்குழு உறுப்பினர் பதவியை அக்கட்சி இவருக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.