மேலும் 9 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரையில் மொத்தமாக 820 கடற்படை உறுப்பினர்கள் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.