(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தளை ) -மாத்தளை சேர எல்ல நீர்வீழ்ச்சியில் விழுந்த 27 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
திருமண முந்தைய படப்பிடிப்பிற்காக (wedding pre-shoot) குறித்த இளைஞன் தனது வருங்கால மனைவியுடன் மாத்தளை சேர எல்ல நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த ஜோடி நீர்வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.
மணமகனுடன் நீர்வீழ்ச்சியில் விழுந்த மணமகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குருநாகலில் வசிக்கும் இந்த இளைஞர் அடுத்த மாதம் திருமணத்தில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.