பொதுத் தேர்தல் – ஊழியர்களது விடுமுறை குறித்து அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஒரு ஊழியர் கோரிய விடுமுறை வழங்காதவிடத்து அது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஊழியர்களுக்கு வாக்களிக்க சரியான நேரம் வழங்கப்பட வேண்டும் எனவும் குறித்த ஆணையகம் தெரிவித்துள்ளது.