மேலும் 285 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜோர்தானில் சிக்கியிருந்த 285 இலங்கையர்கள் இன்று(14) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்-1506 எனும் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தொழில் நிமித்தம் ஜோர்தான் நாட்டுக்கு சென்றிருந்தவர்களே இன்று(14) இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு, நாட்டை வந்தடைந்தவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.