மோட்டார் சைக்கிளில் வீழ்ந்து இவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டதெனிய பிரதேசத்தில் சிறுமியின் கொலையாளிகளை கைது செய்யுமாறு கோரி பிரதேச மக்கள் போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் தொடர்பிலான கடமைகளில் ஈடுபடும் நோக்கில் குறித்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இந்த உத்தியோகத்தருக்கு நெஞ்சு வருத்தம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் திவுலப்பிட்டி ஹொரகாமுல்ல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை தண்டிக்குமாறு கோரி பத்து கிலோ மீற்றர் தூரம் வரையில் நடந்து சென்று சுமார் 300-400 பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தற்போது இந்தப் பெண்கள் திவுலப்பிட்டி நகரில் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.