மேலும் 10 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2763 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2094 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.