(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரத தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று(28) தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராசிரியர் லலிதசிறி குணருவன் ரயில்வே திணைக்களத்திற்கு பிரதான பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான ஏற்பாட்டாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தார்.
பேராசிரியர் லலிதசிறி முன்னர் பல சந்தர்ப்பங்களில் ரயில்வே திணைக்களத்தினை அடக்கும் முறைகளுக்கு முன்னின்றவர் எனவும் மீளவும் அவரை குறித்த பதவிக்கு நியமிப்பதற்கு அவர் தகுதியற்றவர் என்றும் இந்திக மேலும் தெரிவித்திருந்தார்.
எனவே, இவரது நியமிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வாறு ரயில்வே பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.