ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(18) நடைபெறவுள்ளது.
இன்று மாலை 6.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமித்தல், கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ள எடுத்துள்ள தீர்மானம், அவ்வாறு அமர்வதனால் ஏற்படக்கூடிய அரசியல் ரீதியான நிலைமைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்படவுள்ளது.
மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(riz)