
நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாம்
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கொலிவூட் பிரபல நடிகர் ஷாம் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நடிகர் ஷாமுக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடுவதாகவும், சூதாட்டம் நடப்பதாகவும் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நேற்றிரவு அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்களை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பிணையில் விடுவித்தனர்.
நடிகர் ஷாம், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும், தொடர்ந்து பல நாட்களாக இங்கு இயக்குனர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலர் இது போன்று சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சூதாட்ட முறைப்பாட்டில் நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.