(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – பாகுபலி பிரமாண்ட படத்தை இயக்கிய ராஜமவுலி மற்றும் அவருடைய குடும்பத்தினரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பாலிவூட் பிரபலம் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமவுலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ”
சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். இன்று பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.