2020 IPL இறுதிப் போட்டி ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – 2020 ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மார்ச் – ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.

ஐபிஎல் நிர்வாகம் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த ஐபிஎல் போட்டியை 19 ஆம் திகதி இருந்து நவம்பர் 8 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டிருந்தது.

எப்போதும் ஞாயிற்றுக்கிழமைதான் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும். தற்போது தனியார் நிறுவனம் கேட்டுக்கொண்டதன்படி ஐபிஎல் போட்டியை இரண்டு நாட்கள் நீட்டிக்க ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதனால் நவம்பர் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறுதிப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக இறுதிப் போட்டி நடைபெறும் என்றால் முதன்முறையாக ஞாயிற்றிக்கிழமை அல்லாத தினத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும்.

இந்நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறும் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.