புதிய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் நாமல்

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ புதிய அரசாங்கத்தின் தவறுகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ இது தொடர்பில் டுவிட்டர் கணக்கில் பதவிவேற்றம் ஒன்றியை செய்துள்ளார்.

புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் அமைச்சர்களின் அமைச்சுக்களை இன்னும் வர்த்தமானியில் ஏன் அறிவிக்கவில்லை என அவர் அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

எப்படியிருப்பினும் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு இதுவரையில் இரண்டு வாரங்களே கடந்துள்ளனமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)