தேர்தலின் முதல் பெறுபேறுகள் 1.30 மணிக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேர்தலின் முதல் பெறுபேறுகளை மதியம் 1.30 மணியளவில் வழங்க எதிர்பார்ப்பதாக தேசிய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.