ஐக்கிய தேசியக் கட்சியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி எதிர்க்கட்சி வரிசையில் அமரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப்பதவிகளைப் பெற்று அரசு தரப்பில் அமர்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதே ஒழிய வேறு காரணங்கள் ஏதும் இல்லை எனவும் தெரியவருகிறது