
இறப்பர் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் இறப்பர் உற்பத்தி தேவையான உதவிகளை வழங்குவதுடன், இறப்பர் தொடர்பான தொழிலதிபர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மிளகு, கருவா ஆகிய உற்பத்திகளுக்கான ஏற்றுமதிகளை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும், விவசாய உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஏற்றுமதி செய்வதன் மூலம் விவசாயத்திற்கு நிலையான விலை ஒன்றினை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
அதேபோல், செம்பனை உற்பத்தியை முழுமையாக தடை செய்வதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது இடம்பெற்ற உரையிலேமேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.