தெலுங்கானாவில் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியா தெலுங்கானாவின் ஸ்ரீசைலத்தில் உள்ள நீர்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்தில் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 9 பேர் மின் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்களினால் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.