சில மருந்து வகைகளின் விலை குறைவு

சில மருந்து வகைகளின் விலை குறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.