(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – எதிர்வரும் இந்தியன் பிரீமியர் தொடரில் (ஐபிஎல்) தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என சென்னை சுப்பர் கிங்க்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்,
“.. தனிப்பட்ட காரணங்களுக்கு சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். எனவே அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார். இதுபோன்ற தருணங்களில் சுரேஷ் ரெய்னா குடும்பத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும்..” எனவும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Suresh Raina has returned to India for personal reasons and will be unavailable for the remainder of the IPL season. Chennai Super Kings offers complete support to Suresh and his family during this time.
KS Viswanathan
CEO— Chennai Super Kings (@ChennaiIPL) August 29, 2020