(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த சனிக்கிழமை சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விலகியதை அடுத்து அவர் 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
டோனி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்த போது தானும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்தார். அதுமட்டுமின்றி டோனி சென்ற பாதையில் தானும் செல்வதாகவும் அறிவித்தார்
இந்த நிலையில், ரெய்னா – டோனி இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாய் சென்ற உடன் சிஎஸ்கே வீரர்களுக்கு தனிமைபடுத்தலில் இருக்க தனித்தனி அறைகள் கொடுக்கப்பட்ட நிலையில், ரெய்னா தனக்கு வழங்கப்பட்ட அறை சரியில்லை, டோனிக்கு அளித்தது போல தனக்கும் அறை வழங்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால், தனிமைபடுத்தலில் இருந்ததால் அறையை மாற்றுவது சாத்தியமில்லாத ஒன்று எனவும்,இது குறித்து டோனி, ரெய்னாவிடம் பேசியும் பலனில்லாமலும் போனதை தொடர்ந்து ரெய்னா சமாதானம் ஆகாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான் அவரை இந்தியா செல்ல ஒப்புக் கொண்டுள்ளது சிஎஸ்கே அணி நிர்வாகம்.
தலைவர் தோனிக்கு தந்ததைப் போல் பால்கனியுடன் கூடிய அறை தனக்கு தரப்படாததால் ரெய்னா அதிருப்தி அடைந்ததாகவும், தோனி அறிவுரைப்படி சென்னையில் நடந்த முகாம் பற்றியும் அணி நிர்வாகத்திடம் ரெய்னா கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.