எதிர்வரும் ஈகைத்திருநாள் இனிய ஹஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு மாவனல்லை மாராவை இளைஞர்கள் ஏற்பாடு செய்து நடாத்தும் ஹஜ்ஜுப் பெருநாள் விளையாட்டு விழா இம்முறையும்(2௦15) பிரமாண்ட வீதியோட்டப் போட்டியுடன் ஆரம்பமாக உள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை(25) நடைபெறவுள்ள இப்போட்டி நிகழ்ச்சியில் பாரம்பரிய விளையாட்டுக்களான சாக்கோட்டம், கயிறிழுத்தல், முட்டியுடைத்தல் போன்ற பல போட்டிகளும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவனல்லை, மாராவை, இஷ்டா நிறுவன மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றியீட்டி பல பெறுமதிமிக்க பரிசில்களை வென்றிட உங்களையும் அழைக்கின்றார்கள். அணி திரண்டு வாருங்கள், பரிசல்களைப் பெற்றிடுங்கள்.
வீதியோட்டப் போட்டியினை https://www.facebook.com/JMmedia.lk என்ற முகவரியில் கண்டு மகிழலாம்
மேலும், இப்போட்டி நிகழ்வுக்கு மாவனல்லை JM MEDIA நிறுவனம் ஊடக அனுசரனை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது.
(ராஷிட் மல்ஹர்டீன்)