சிற்றுண்டிச்சாலைகளை மீள திறக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கை மற்றும் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.