
காய்கறிகள், மீன்களின் மொத்த – சில்லறை விலைகளில் உயர்வு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் காலநிலையுடன் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல வகையான காய்கறிகள் மற்றும் மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
உற்பத்தி பகுதிகளிலிருந்து வழங்கல் குறைவாக உள்ளமையே இதற்கான காரணம் என பொருளாதார மத்திய மையங்கள் தெரிவித்துள்ளன.
போஞ்சி, கரட், தக்காளி, சிவப்பு வெங்காயம், பெரிய வெங்காயம், உலர்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் மொத்த மற்றும் சில்லறை விலை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலையும் அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.