
நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார்.
நடிகர் வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தினால் முடங்கியதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், வடிவேல் பாலாஜி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் திடீர் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.