சஜின் வாஸுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு குற்ற புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

பாரியளவிலான பல குற்றச்சாட்டுகளின் கீழ் பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிடம், இன்று வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்கு குற்ற புலனாய்வு பிரிவு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், மஹிந்த ஆட்சியின் கீழ் இடம்பெற்ற பெரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பிலான பல சம்பவங்கள் குறித்து சஜின் வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருங்கியவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறுவதற்கு இணக்கம் வெளியிட்டதாக செய்தி வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)