பிக்பாஸ் போட்டியாளர்கள் யார்?

பிக்பாஸ் போட்டியாளர்கள் யார்?

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் பட்டியல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நான்காவது சீசன் எதிர்வரும் ஒக்டோபர் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

குறித்த பட்டியலில், நடிகை ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா, செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகிய பெண் போட்டியாளர்களும், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, சிங்கர் அஜீஸ், மாடல் பாலாஜி முருகதாஸ் ஆகிய ஆண் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தற்போது இந்த பட்டியல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதிகாரப்பூர்வமாக ஒக்டோபர் 4ம் திகதி தெரியவரும்.