பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல் – கல்வி அமைச்சு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் திகதிகளில் மாற்றம் இல்லை எனவும் திட்டமிட்டபடி பரீட்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பிலான கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.